Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இரு சிறுவர்களுக்குக் கொடூர சித்திரவதை: தாய் மற்றும் காதலன் கைது!

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2026 • 6:42 AM

இரு சிறுவர்களுக்குக் கொடூர சித்திரவதை: தாய் மற்றும் காதலன் கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அம்பேவெல, வர்விவத்தை பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் இரண்டரை வயது சிறுவன் ஆகியோரைத் தடிகளால் தாக்கி, கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் இன்று (20) கெப்பெட்டிபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • தடிகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்து சித்திரவதைக்கு உள்ளான 8 வயது சிறுமியும் இரண்டரை வயது சிறுவனும் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
  • இந்தக் குழந்தைகள் இருவரும் தமது தாய் மற்றும் 38 வயதுடைய சட்டபூர்வமான தந்தையுடன் மிரஹவத்தை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.
எழுத்து அளவு:

அம்பேவெல, வர்விவத்தை பகுதியில் 8 வயது சிறுமி மற்றும் இரண்டரை வயது சிறுவன் ஆகியோரைத் தடிகளால் தாக்கி, கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோர் இன்று (20) கெப்பெட்டிபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பேவெல, வர்விவத்தை கீழ்ப்பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவர்களின் 31 வயதுடைய தாய் மற்றும் 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அவரது கள்ளக்காதலன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தடிகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்து சித்திரவதைக்கு உள்ளான 8 வயது சிறுமியும் இரண்டரை வயது சிறுவனும் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்தக் குழந்தைகள் இருவரும் தமது தாய் மற்றும் 38 வயதுடைய சட்டபூர்வமான தந்தையுடன் மிரஹவத்தை பகுதியில் வசித்து வந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், குழந்தைகளின் தந்தையின் நெருங்கிய நண்பர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கெப்பெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...