Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வட, கிழக்கில் கனமழை; வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை!

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2026 • 6:16 AM

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வட, கிழக்கில் கனமழை; வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாழமுக்கமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ்.
  • ஆகவே ஊவா, மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களின் உறவுகள் கனமழையோடு கூடிய நிலச்சரிவு அனர்த்தங்கள் தொடர்பாக விழிப்பாக இருப்பது சிறந்தது.
  • அதேவேளை முன்னர் கூறியவாறு இன்று முதல் எதிர்வரும் 22.02.2026 வரை நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எழுத்து அளவு:

தாழமுக்கமாக மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,

இதனால் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை இன்றும், நாளையும், நாளை மறுநாளும் பரவலாக கனமழை முதல் மிகக் கனமழையாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் மேற்குறிப்பிட்ட மூன்று நாட்களிலும் அவ்வப்போது கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே கிழக்கு மாகாணங்களின் குறிப்பாக ஆற்றங்கரையோரங்கள், குளங்களின் வான் பாயும் பகுதிகள், தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பாக இந்த மூன்று நாட்களிலும் மிக அவதானமாக இருப்பது மிக அவசியம்.

வடக்கு மாகாணத்திலும் இன்று முதல் மழை பரவலடைவதோடு செறிவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக பெருநிலப்பரப்பில் சில இடங்களில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மத்திய, ஊவா, தென், சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே ஊவா, மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களின் உறவுகள் கனமழையோடு கூடிய நிலச்சரிவு அனர்த்தங்கள் தொடர்பாக விழிப்பாக இருப்பது சிறந்தது.

அதேவேளை முன்னர் கூறியவாறு இன்று முதல் எதிர்வரும் 22.02.2026 வரை நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று முதல் இலங்கையின் கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

பொதுவாக வடகீழ்ப் பருவகால வானிலைத் தோற்றப்பாடுகள், ஜனவரி மாதத்தின் இறுதிபபகுதியில் இருந்தே பின்வாங்க தொடங்கி பெப்ரவரி முற்பகுதியில் முழுவதுமாக விலகுவதே வழமை. ஆனால் இம்முறை மார்ச் நடுப்பகுதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக எங்கள் காலநிலைப் பருவத்திற்கும், நெற்செய்கைப் பருவத்திற்குமிடையில் எந்தவிதமான ஒத்திசைவும் காணப்படவில்லை. இம்முறை அந்த நிலைமை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நெற்செய்கையில் நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது.

ஆகவே துறை சார்ந்த விற்பன்னர்கள் இது தொடர்பாக அவதானம் செலுத்தி மாற்று வழிமுறைகள் பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு வட, கிழக்கில் கனமழை; வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation