ஆய்வாளர் அஜித் பரக்கும் (Ajith Parakum), அவரிடம் இன்னும் போர்க்குற்ற மனோபாவமே (War Crime Tendency) காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களின் சுருக்கம் வருமாறு:
சரத் பொன்சேகா முன்வைக்கும் வாதங்களின்படி பார்த்தால், கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்ட விதம் மிகவும் இராஜதந்திரமானது, தேசப்பற்று மிக்கது மற்றும் சட்டபூர்வமானது என்றே கருத வேண்டியுள்ளது.
சர்வதேச யுத்த விதிகளின்படி, சரணடைய விரும்பும் ஒருவருக்கு அதற்கான உரிய பொறிமுறையை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் சரியான விடயமாகும். மூன்றாம் தரப்பினரிடம் அன்றி, நாட்டின் இராணுவத்திடம் சரணடையுமாறு கோருவது தேசப்பற்றான செயலாகும். அவ்வாறு சரணடையும் நபர்களை ஒருபோதும் கொலை செய்ய முடியாது. அவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளையே எடுக்க வேண்டும்.
சரத் பொன்சேகா கூறுவதைப் போன்று, பிரபாகரனை முதலமைச்சராக்க முடியாது. ஏனெனில் அவர் சரணடைந்து கைது செய்யப்பட்டிருந்தால், அவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட தண்டனைகளை அனுபவிப்பதற்காக அவர் உடனடியாகச் சிறையிலடைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை வெளியிடும் பின்னணியில் உள்ள மனோநிலையை அவதானித்தால், அவரிடம் இன்றும் போர்க்குற்றங்களை இழைப்பதற்கான ஒரு தார்மீகத் தூண்டுதல் அல்லது போக்கு காணப்படுவதாகவே தெரிகிறது.
அஜித் பரக்கும்


