Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு: நாமல் ராஜபக்ஷவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உரை இரத்து!

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2026 • 5:58 AM

புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு: நாமல் ராஜபக்ஷவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உரை இரத்து!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பு, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
  • பிரித்தானிய தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு (TYO UK) ஆகியன இணைந்து வெளியிட்ட விசேட அறிக்கையில், நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தியிருந்தன.
  • பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ஷ, பெப்ரவரி மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இரு புகழ்பெற்ற பல்கலைக்கழக சங்கங்களில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எழுத்து அளவு:

அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த அழைப்பு, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ஷ, பெப்ரவரி மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இரு புகழ்பெற்ற பல்கலைக்கழக சங்கங்களில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என கூறப்படுவோர், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு தமது கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

பிரித்தானிய தமிழ் மாணவர் சங்கங்கள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு (TYO UK) ஆகியன இணைந்து வெளியிட்ட விசேட அறிக்கையில், நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தியிருந்தன.

தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அதிகரித்து வந்த அழுத்தங்கள் காரணமாக, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சங்க நிர்வாகிகள் குறித்த உரையை இரத்து செய்ய தீர்மானித்துள்ளனர்.

இந்த இரத்து நடவடிக்கை குறித்து நாமல் ராஜபக்ஷ தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...