பெற்றுக்கொள்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (20) அவரது இல்லத்திற்குச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தனது உடல்நிலை காரணமாக இன்று விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என அவர் குறித்த பிரிவுக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அவரது வீட்டிற்குச் செல்லத் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 18ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் இவ்விடயம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெளிவுபடுத்தியிருந்தது. இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில்;
"2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக, 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவே மைத்திரி விக்ரமசிங்கவை பெப்ரவரி 20ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் ஊடாக அறிவிக்கப்பட்டது."
மைத்திரி விக்ரமசிங்க களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை முன்னாள் பேராசிரியை என்பதும் குறிப்பிடத்தக்கது.


