Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

நாட்டில் பாரிய எரிவாயு தட்டுப்பாடு?

T

The Leader Desk

பிப்ரவரி 20, 2026 • 5:36 AM

நாட்டில் பாரிய எரிவாயு தட்டுப்பாடு?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நுகர்வோரின் நலன் கருதி இதற்கு உடனடியாக தீர்வை வழங்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
  • ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேலதிக கப்பல்கள் வருகை தரவுள்ளன" என அவர் குறிப்பிட்டார்.
  • எதிர்க்கட்சித் தலைவரின் உரை: எரிவாயு தட்டுப்பாடானது மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, இது மக்களின் வாழ்வாதார உரிமையுடன் தொடர்புடையது என்பதால் அவசர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.
எழுத்து அளவு:

குற்றம் சுமத்தியுள்ளார். நுகர்வோரின் நலன் கருதி இதற்கு உடனடியாக தீர்வை வழங்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் உரை:
எரிவாயு தட்டுப்பாடானது மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலாகும் என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, இது மக்களின் வாழ்வாதார உரிமையுடன் தொடர்புடையது என்பதால் அவசர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். சமூக ஊடகங்கள் ஊடாக தகவல்களைப் பெறுவது தவறல்ல எனவும், இந்த எரிவாயு வரிசைகளை எதிர்க்கட்சி உருவாக்கவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போதைய தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டு நுகர்வோரின் பிரச்சினையை தீர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பதில்:
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு இல்லையெனத் தெரிவித்தார். "லாப் (Laugfs) எரிவாயு விநியோகத்தில் மாத்திரமே சிக்கல் நிலவுகிறது. இதனைச் சீர்செய்ய மேலதிக விநியோக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேலதிக கப்பல்கள் வருகை தரவுள்ளன" என அவர் குறிப்பிட்டார்.

மேலும், லாப் நிறுவனம் உடனடியாக எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற அச்சத்தினால் கேள்வி (Demand) அதிகரித்துள்ளதே தற்போதைய நிலைக்குக் காரணம் எனவும் அவர் கூறினார். மஞ்சள் நிற சிலிண்டர்களை (Laugfs) பயன்படுத்துவோருக்கே இந்த சிக்கல் எழுந்துள்ளதாகவும், மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நாமல் ராஜபக்ஷவின் கோரிக்கை:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவும் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, ஹம்பாந்தோட்டை துறைமுக பொருளாதார வலயத்தில் உள்ள எரிவாயு முனையத்திலிருந்து எரிவாயுவை விநியோகிக்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் தமது அரசாங்கம் சரியான நேரத்தில் தீர்மானங்களை எடுக்காததால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

லாஃப் (Laugfs) நிறுவனத்தின் விளக்கம்:
இந்த விவகாரம் தொடர்பாக லாப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமைந்துள்ள எரிவாயு சேமிப்பு முனையத்திலிருந்து உள்ளூர் சந்தைக்கு விநியோகிப்பதில் உள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகளே தற்போதைய தட்டுப்பாட்டுக்கு பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும், சர்வதேச விநியோகஸ்தர்களிடமிருந்து கொழும்பு துறைமுகம் ஊடாக நேரடியாக எரிவாயுவைப் பெற்று விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...