விசேடமாக சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் அதிகமாகக் காணப்படுவதாக கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ரவிந்த உடகமகே குறிப்பிட்டுள்ளார்.
"தற்போது நிலவும் குளிரான மற்றும் வரட்சியான காலநிலை காரணமாக சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கக்கூடும். இந்த வைரஸ்கள் பெரும்பாலும் நமது சுவாசப் பாதையின் மேல் பகுதியை பாதிக்கின்றன. பொதுவாக முன்பள்ளி வயதுடைய சிறுவர்கள் மத்தியில் இந்த வைரஸ் நோய்கள் வேகமாகப் பரவக்கூடும். காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, கடுமையான தலைவலி, தசை வலி மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இதன்போது ஏற்படலாம். உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேலாக இந்த அறிகுறிகள் நீடித்தால் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்."
இதேவேளை, நிலவும் காலநிலையுடன் வளியின் தரம் (Air Quality) வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்த நிலைமை சீராகும் என அதன் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.


