Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

புதிய பயங்கரவாத சட்டத்துக்கு ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் எதிர்ப்பு!

T

The Leader Desk

ஜனவரி 20, 2026 • 4:06 AM

புதிய பயங்கரவாத சட்டத்துக்கு ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காணப்படுவதாக 'ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்' (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது.
  • இது ஜீ.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு அமைவானது அல்ல எனவும் 'ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' அமைப்பு கூறுகிறது.
  • அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்த புதிய சட்டமூலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும்.
எழுத்து அளவு:

காணப்படுவதாக 'ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்' (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்த புதிய சட்டமூலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும்.

இது ஜீ.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு அமைவானது அல்ல எனவும் 'ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' அமைப்பு கூறுகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் செயற்பாடுகளையும் ஒழிப்பதற்கும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆயினும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக 'ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்' அமைப்பின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்ட அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெற்றதுடன், அது தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பில் பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதில் பயங்கரவாதம் அல்லாத குற்றங்களும் உள்ளடக்கப்படுவதால், அரசியல் செயற்பாடுகளைத் தடை செய்தலாக இதனை அர்த்தப்படுத்த முடியும் எனவும் 'ஹியூமன் ரைட்ஸ்' அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...