Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அநுர அரசுக்கு சி.வி.கே பகிரங்க எச்சரிக்கை!

T

The Leader Desk

ஜனவரி 20, 2026 • 3:30 AM

அநுர அரசுக்கு சி.வி.கே பகிரங்க எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பிலோ, கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலோ தேசிய மக்கள் சக்தியினர் தலையிட வேண்டிய அவசியமும் தேவையில்லை” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.
  • கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (19) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார்.
  • வெறுமனே அரச நிதியில் என்.பி.பி அல்லது ஜே.வி.பி.
எழுத்து அளவு:

தொடர்பிலோ, கட்சியின் உள்வீட்டு விவகாரங்களிலோ தேசிய மக்கள் சக்தியினர் தலையிட வேண்டிய அவசியமும் தேவையில்லை” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

“அதேபோன்று இந்த விவகாரத்தில் அநுர தரப்பினர் குத்தி முறியவும் தேவையில்லை. மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தும் கனவும் ஒருபோதும் பலிக்காது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (19) நடத்திய ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து

கொண்டிருந்தார். அந்தக் கூட்டங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுக்கோ, மக்கள் பிரதிகளுக்கோ உரிய முறையில் அழைப்புகளும் விடப்படவில்லை.

“அதேநேரம் அழைத்த சில கூட்டங்களுக்கு உரிய அங்கீகாரமும்

வழங்கப்படவில்லை. வெறுமனே அரச நிதியில் என்.பி.பி அல்லது ஜே.வி.பி. கட்சியினர் மட்டுமே அந்த நிகழ்வுகளில் பங்கெடுத்து இருக்கின்றனர். எனவே, அரச நிதியில் தேசிய மக்கள் சக்தியினர் 'ஷோ' காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

“மேலும் என்.பி.பியினர் வடக்குக்கு வந்து 'ஷோ' அதாவது படம் காட்டுவதை நிறுத்த வேண்டும். இந்த விடயங்களை ஜனாதிபதி கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். இந்த அரசு தாம் அரசியல் செய்வதற்காக எமது கட்சியை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. எமது கட்சி விடயங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அநுர அரசுக்கு சி.வி.கே பகிரங்க எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation