Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

20 ஆவது கொரோனா மரணம் பதிவு! 54 வயதான பெண் உயிரிழப்பு

T

The Leader Desk

அக்டோபர் 31, 2020 • 2:41 PM

20 ஆவது கொரோனா மரணம் பதிவு! 54 வயதான பெண் உயிரிழப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிரிழந்த பெண்ணின் PCR சோதனை அறிக்கை இன்று காலை வெளியானதுடன், அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கொழும்பு 12-ஐ சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
  • உயிரிழந்த பெண், நீரிழிவு நோயினால் கடந்த 29 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக அதிகரித்துள்ளது.
எழுத்து அளவு:

உயிரிழந்த பெண்ணின் PCR சோதனை அறிக்கை இன்று காலை வெளியானதுடன், அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 12-ஐ சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், நீரிழிவு நோயினால் கடந்த 29 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 633 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் 83 பேரும் பேலியகொடை மற்றும் மீன்பிடித் துறைமுகங்களில் அடையாளம் காணப்பட்டோருடன் தொடர்புகளைப் பேணிய 236 பேரும் இதில் அடங்குகின்றனர்.

இதுவரை தொற்றுடன் அடையாளங்காணப்பட்டோரில் 6 , 123 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,282 பேர் ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...