Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

திருமணமான 2 நாளில் நடந்த சோகம்..!

T

The Leader Desk

ஜூன் 11, 2023 • 10:29 AM

திருமணமான 2 நாளில் நடந்த சோகம்..!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்திருந்தனர்.
  • மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
  • மேற்குவங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த முகமது ரஃபீக், தீபிகா பாலி ஆகியோருக்கு, கடந்த மே மாதம் 31-ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.
  • அதன் பின்னர் இருவரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஜூன் 2-ம் திகதி பயணம் செய்துள்ளனர்.
எழுத்து அளவு:
ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்திருந்தனர்.

மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதுமிலிருந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த விபத்தில் விபத்துக்குள்ளான புதுமணத் தம்பதியினர் தற்போது ஒன்றாக மருத்துவமனையில் இருக்கும் செய்தி வெளிவந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த முகமது ரஃபீக், தீபிகா பாலி ஆகியோருக்கு, கடந்த மே மாதம் 31-ம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.

அதன் பின்னர் இருவரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஜூன் 2-ம் திகதி பயணம் செய்துள்ளனர்.

அப்போது இவர்கள் பயணம் செய்த ரயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முகமது ரஃபீக் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், தீபிகா பாலி அறுவை சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கணவர் படுகாயம் அடைந்த நிலையில், அவரையும் தன்னையும் ஒரே இடத்தில வைத்து சிகிச்சை அளிக்குமாறு தீபிகா கூறியுள்ளார்.

எனினும் அவர்களுக்கு வேறு வேறு இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது தீபிகா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரின் கணவர் தற்போதும் சிகிச்சையில் உள்ளார். அவரை அவரின் மனைவி தற்போது கவனித்து வருகிறார். இந்த தகவல் தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...