கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபரொருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த பெண் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
மாகெவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்களாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.
இதன்போது கூரிய ஆயுதத்தால் பெண் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனமலேவத்த பகுதியில் தகராறு நீண்டதில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் களுஹக்கல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையை செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 பேர் படுகொலை!
T
The Leader Desk
மார்ச் 30, 2023 • 10:38 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகெவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நபரொருவர் பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
- மாகெவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
- இதன்போது கூரிய ஆயுதத்தால் பெண் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- கொலைச் சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

