Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இலங்கையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் 1980 க்கு பிறகு மீண்டும் ஆரம்பமா?

T

The Leader Desk

டிசம்பர் 23, 2020 • 3:16 AM

இலங்கையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் 1980 க்கு பிறகு மீண்டும் ஆரம்பமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, இந்த சட்டவிரோத வணிகம் நடப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
  • இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 12 பெண்களை, சிறுவர் மற்றும் மகளிர் போலீஸ் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
  • அதுமாத்திரமன்றி, சந்தேகநபரின் பாதுகாப்பில் மேலும் 12 கர்ப்பணி பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.
  • பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மற்றும் திருமணத்திற்கு முன்பாக கர்ப்பம் தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகள் விற்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.
எழுத்து அளவு:

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, இந்த சட்டவிரோத வணிகம் நடப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் மகளிர் போலீஸார் நடத்திய விசாரணைகளின் ஊடாக இந்த சட்டவிரோத வர்த்தகம் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இணையத்தளத்தில் காணொளி விளம்பரம் ஊடாக பிரசாரம் செய்து, இந்த வர்த்தகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு அல்லது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை, குறித்த நபர் முதலில் தமது இடத்திற்கு வரவழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குறித்த பெண்களுடன், இந்த சந்தேகநபர் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், தமது குழந்தைகளை குறித்த நபர் தன்வசப்படுத்திக்கொண்டு, அந்த குழந்தைகளை மூன்றாவது தரப்பிற்கு விற்பனை செய்து வந்துள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 12 பெண்களை, சிறுவர் மற்றும் மகளிர் போலீஸ் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஐந்து பேரின் குழந்தைகளை, குறித்த நபர் மூன்றாவது தரப்புக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக வெளியாகியுள்ளது.

அதுமாத்திரமன்றி, சந்தேகநபரின் பாதுகாப்பில் மேலும் 12 கர்ப்பணி பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

கொழும்பு புறநகர் பகுதியான மொறட்டுவை நகரில் இரண்டு இடங்களில் இந்த சட்டவிரோத குழந்தை வணிகம் முன்னெடுக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மற்றும் திருமணத்திற்கு முன்பாக கர்ப்பம் தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகள் விற்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன்பாக கர்ப்பம் தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகள் விற்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

இலங்கையின் குற்றவியல் சட்டத்தில் ஆள் கடத்தல் வர்த்தக குற்றச்சாட்டின் கீழ் இது தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றம் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கிறார்.

குழந்தையொன்று பிறப்பதற்கு முன்பதாகவே விற்பனை செய்வதற்கு தயார்படுத்தப்படுவதானது, ஆள் கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றம் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கை சட்டத்தின் படி, குழந்தையொன்று மூன்றாவது தரப்புக்கு வழங்கப்படுவதாயின், அது மாவட்ட நீதிமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை என அவர் கூறுகிறார்.

இந்த சம்பவம் தொடர்பில் மாத்தளை - உக்குவளை பகுதியைச் சேர்ந்த 47 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

1980களில் நடத்தப்பட்ட குழந்தைகள் பண்ணை

இலங்கையில் 1980ம் ஆண்டு காலப் பகுதியில் குழந்தைகள் பண்ணையொன்று நடத்தப்பட்டதை இலங்கை அதிகாரிகள் கடந்த காலங்களில் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அந்த காலப் பகுதியில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

1980ம் ஆண்டு காலப் பகுதியில் மாத்திரம், சுமார் 11,000 குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள குடும்பங்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

நெதர்லாந்து, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், மீண்டும் குழந்தைகள் வர்த்தகம் தொடர்பிலான தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் போலீஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அஜித் ரோஹண தெரிவிக்கிறார்.

BBC

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் 1980 க்கு பிறகு மீண்டும் ஆரம்பமா? | Tamil Leader | We Lead the Nation