Tamil Leader News
முக்கியம்
'யுத்தத்தினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு இன்னமும் நிரந்தர வதிவிடங்கள் இல்லை!'●காசல்ரீ நீர்த்தேக்கம் குப்பைகளால் நிரம்பியதால் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறைகள் நெருக்கடியில்!●ஐஸ்கிரீம் தரம் குறித்து இலங்கையில் சோதனைகள் ஆரம்பம்!●8 EPDP உறுப்பினர்களுக்கு மரண தண்டனை!●பாடசாலை மாணவர்களுக்கான உணவுக் கொடுப்பனவுக்கு வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டு!●பணம் இருந்தும் தேக்கமடையும் அபிவிருத்தி: 2027 இன் பாரிய சவாலை எவ்வாறு எதிர்கொள்வது?●SLT-Mobitel நிறுவனத்தின் புதிய AI பயணத்திற்கு உலகளாவியப் போட்டியின் சவால்!●'மீன் செயலி' கதை: 1 இலட்சம் மீனவர்களும் ஒரு பில்லியன் ரூபாயின் உண்மையும்!●மீமுரே சம்பவம்: பாலியல், ஆசை மற்றும் கலாசாரத்தின் இருண்ட கண்ணாடி!●ஞானசார தேரரின் 4 வருட சிறைத் தண்டனையை உறுதி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!●
செய்திகள்

8 EPDP உறுப்பினர்களுக்கு மரண தண்டனை!

Menaka

Menaka

நவம்பர் 19, 2026 • 7:06 PM

8 EPDP உறுப்பினர்களுக்கு மரண தண்டனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேவதாஸ் சுரேஷ் குமார் என்ற நபரை வான் ஒன்றில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், 8 பிரதிவாதிகளுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (19) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  • இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட 9 சந்தேகநபர்களில் ஒருவரை விடுதலை செய்யுமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.ஜே.
  • சம்பவம் மற்றும் விசாரணையின் பின்னணி கடத்தல் மற்றும் கொலை: 2008 ஜூன் 19 ஆம் திகதி, அப்போதைய செங்கலடி முகாமில் தங்கியிருந்த ஈ.
  • நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரால் 9 ஈ.
எழுத்து அளவு:

2008ஆம் ஆண்டில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேவதாஸ் சுரேஷ் குமார் என்ற நபரை வான் ஒன்றில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில், 8 பிரதிவாதிகளுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (19) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட 9 சந்தேகநபர்களில் ஒருவரை விடுதலை செய்யுமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டீ.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் மற்றும் விசாரணையின் பின்னணி

  • கடத்தல் மற்றும் கொலை: 2008 ஜூன் 19 ஆம் திகதி, அப்போதைய செங்கலடி முகாமில் தங்கியிருந்த ஈ.பி.டி.பி (EPDP) உறுப்பினர்கள் சிலர் சுரேஷ் குமார் என்பவரை வான் ஒன்றில் கடத்திச் சென்று கொலை செய்து, சடலத்தைக் குழிதோண்டிப் புதைத்து அதன் மீது வாழைக்கன்று ஒன்றை நட்டிருந்தமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.

  • நீதிமன்ற நடவடிக்கை: இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரால் 9 ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகளின் பின்னர், 2016 ஆம் ஆண்டில் மேலதிக விசாரணைகளுக்காக இவ்வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தீர்ப்பு மற்றும் சிறையில் அடைப்பு

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வானும் கைப்பற்றப்பட்ட நிலையில், மேல் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. நீண்டகால வழக்கு விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 8 பிரதிவாதிகளுக்கு இவ்வாறு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...