மற்றும் குடியேற்ற விரிவாக்க நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீனத் தூதரகம் வெளியிட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்ட கண்டன அறிக்கையில், இலங்கையுடன் இணைந்து 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
ஆரம்பத்தில் 85 நாடுகள் மாத்திரமே இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை உட்பட மேலும் பல நாடுகள் இதில் இணைந்துள்ளன. இதன் மூலம் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிரான சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சட்டங்களை மீறி இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இந்த ஒருதலைப்பட்சமான முடிவுகள் உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என இலங்கை வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பாலஸ்தீன நிலப்பரப்பின் புவியியல் மற்றும் சனத்தொகை கட்டமைப்பை மாற்றியமைக்கும் எந்தவொரு முயற்சியையும் இலங்கை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
1967ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதை உறுதி செய்யும் 'இரு நாட்டுத் தீர்வு' (Two-state solution) திட்டத்திற்கு இலங்கை மீண்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
அரபு நாடுகளின் கூட்டமைப்பு (League of Arab States), இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய முக்கிய அமைப்புகளும் இந்த கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலின் இருப்பு சட்டவிரோதமானது என இந்த அறிக்கை மீளவும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை நீண்டகாலமாகப் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அவர்களின் சுதந்திரமான அரசுக்கும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த புதிய கண்டன அறிக்கை அதற்கான மற்றுமொரு சான்றாக அமைந்துள்ளது.



