Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

'நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு'; செம்மணி புதைகுழி விவகாரத்தில் போராட்டத்தில் குதித்த உறவுகள்

T

The Leader Desk

ஜூன் 19, 2026 • 5:00 PM

'நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு'; செம்மணி புதைகுழி விவகாரத்தில் போராட்டத்தில் குதித்த உறவுகள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹர்ஷன நாணயக்கார விஜயம் செய்துள்ள நிலையில், “நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?” என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த போராட்டமானது, இன்று (19.06.2026) ஏ - 9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
  • இந்த நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு இன்று(19) நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
  • அமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு, இன்று(19) 2 மணி முதல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சித்துப்பாத்தி இந்து மயானத்தின் முன்றலில், ஏ - 9 வீதியை மறித்துத் தமது கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

ஹர்ஷன நாணயக்கார விஜயம் செய்துள்ள நிலையில், “நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?” என்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, இன்று (19.06.2026) ஏ - 9 பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

கொந்தளிப்புடன் களத்தில் இருந்த உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு இன்று(19) நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அமைச்சரின் இந்த வருகையை முன்னிட்டு, இன்று(19) 2 மணி முதல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சித்துப்பாத்தி இந்து மயானத்தின் முன்றலில், ஏ - 9 வீதியை மறித்துத் தமது கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?

போராட்டக்காரர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பித் தமது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?", "செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளுக்குச் சர்வதேச மேற்பார்வை வேண்டும்", "உள்ளகப் பொறிமுறைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை" மற்றும் "சர்வதேச விசாரணையே இறுதித் தீர்வு" உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதி அமைச்சரின் வருகை மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைகள் வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ள போராட்டக்காரர்கள், தமக்கு உள்நாட்டுப் பொறிமுறைகளில் துளியும் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடும் விசாரணையுமே தமக்கான நீதியைப் பெற்றுத் தரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...