Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வலிகாமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அமைதியின்மை!

T

The Leader Desk

ஜூன் 19, 2026 • 5:40 AM

வலிகாமம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் அமைதியின்மை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
  • குறித்த பிரதேச சபையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஶ்ரீபவாநந்தராஜா தலைமையில் நேற்று (18) கூடியது.
  • எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என அர்ச்சுனா வலியுறுத்தினார்.
எழுத்து அளவு:

உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

குறித்த பிரதேச சபையின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஶ்ரீபவாநந்தராஜா தலைமையில் நேற்று (18) கூடியது.

இதன்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதன் புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனைக்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது எதிர்ப்பை தெரிவித்தார்.

அது தொடர்ந்தும் மாகாண சபை நிர்வாகத்தின் கீழேயே இயங்க வேண்டும் என தெரிவித்ததுடன், குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு அரசாங்கத்தினால் முறையாக நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எவ்வாறாயினும் வைத்தியசாலையின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என அர்ச்சுனா வலியுறுத்தினார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், குறித்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைக்க அபிவிருத்திக் குழு தலைவர் நேற்றைய தினம் தீர்மானித்தார்.

ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அங்கு தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...