Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும்; பிரிட்டன் எம்.பி. உமா குமாரன் வலியுறுத்தல்!

T

The Leader Desk

மே 19, 2026 • 4:48 AM

இறந்தவர்களால் நீதி கோரிப் பேச முடியாது; அவர்களுக்காக நாமே குரலெழுப்ப வேண்டும்; பிரிட்டன் எம்.பி. உமா குமாரன் வலியுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்.
  • ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், இது குறித்து உமா குமாரன் தெரிவித்துள்ளதாவது:- "மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரப்படுகின்றது.
  • இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை 17 ஆண்டுகளின் பின்னர் இம்முறை நினைவுகூருகின்றோம்.
  • குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்ளங்கலாக மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட செம்மணி, சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது, தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதாபிமான மீறல்களை நினைவூட்டுகின்றது.
எழுத்து அளவு:

என்பன உறுதிசெய்யப்படுவதை முன்னிறுத்தி நான் எனது குரலையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப முடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும்"

இவ்வாறு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார்.

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றுடன் 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், இது குறித்து உமா குமாரன் தெரிவித்துள்ளதாவது:-

"மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரப்படுகின்றது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை 17 ஆண்டுகளின் பின்னர் இம்முறை நினைவுகூருகின்றோம்.

போரிலிருந்து தப்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வலியும், வேதனையும் இப்போதும் தொடர்கின்றது. இது உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றது. குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உள்ளங்கலாக மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட செம்மணி, சித்துபாத்தி மனிதப்புதைகுழியானது, தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனிதாபிமான மீறல்களை நினைவூட்டுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லும்போது பொறுப்புக்கூறலுக்கான எமது குரல்கள், முன்னெப்போதையும் விட மிக வலுவாக ஓங்கி ஒலிக்கின்றன. நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மையையும், நீதியையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும். எனினும் இன்னமும் மௌனமும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குமே தொடர்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாத, அமைதியான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோன்று மீறல்களிலிருந்து உயிர்பிழைத்தவர்களின் கதைகள் மௌனமாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். இறந்தவர்களால் நீதிக்காக குரலெழுப்ப முடியாது. அவர்களுக்கான அதனைச் செய்வது உயிருடன் இருப்பவர்களின் கடமையாகும்"

என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...