பாதுகாப்புச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த, பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதற்காக அடுத்த வாரத்தில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பெயரை ஆளுங்கட்சிக்கு நெருக்கமான தரப்பினர் முன்மொழிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, ஜெனரல் தயா ரத்நாயக்க அந்தப் பதவியைப் பொறுப்பேற்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


