Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

85,000 பேருக்கு 'அஸ்வெசும' பறிபோகும் அபாயம்!

T

The Leader Desk

பிப்ரவரி 19, 2026 • 5:23 AM

85,000 பேருக்கு 'அஸ்வெசும' பறிபோகும் அபாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெற்றுவரும் சுமார் 85,000க்கும் அதிகமான ஏழை மற்றும் அதி ஏழ்மைப் பிரிவினருக்கு அந்த நிதியுதவி அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • விபரங்களை இற்றைப்படுத்துவதற்கான கால அவகாசம் நாளை (20ஆம் திகதி, வெள்ளிக்கிழமை) முடிவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
  • அதி ஏழ்மைப் பிரிவைச் சேர்ந்த 28,608 பேரும், ஏழ்மைப் பிரிவைச் சேர்ந்த 56,548 பேருமாக மொத்தம் 85,156 பேர் இதுவரை தமது விபரங்களை உறுதிப்படுத்தவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
  • பிரதேச செயலகம்: அந்தந்த பிரதேச செயலகங்களில் உள்ள நலன்புரி நன்மைகள் அலகில் நேரடியாகச் சென்று.
எழுத்து அளவு:

பெற்றுவரும் சுமார் 85,000க்கும் அதிகமான ஏழை மற்றும் அதி ஏழ்மைப் பிரிவினருக்கு அந்த நிதியுதவி அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் விண்ணப்பித்து, தற்போது பலன்களைப் பெற்றுவரும் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களின் விபரங்களை மீள உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விபரங்களை இற்றைப்படுத்துவதற்கான கால அவகாசம் நாளை (20ஆம் திகதி, வெள்ளிக்கிழமை) முடிவடையவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

அதி ஏழ்மைப் பிரிவைச் சேர்ந்த 28,608 பேரும், ஏழ்மைப் பிரிவைச் சேர்ந்த 56,548 பேருமாக மொத்தம் 85,156 பேர் இதுவரை தமது விபரங்களை உறுதிப்படுத்தவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களை வழங்கத் தவறினால், அடுத்த கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும் போது இவர்களுக்கான நிதி வழங்கப்படமாட்டாது என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவெலகொட தெரிவித்துள்ளார்.

விபரங்களைச் சமர்ப்பிக்கும் முறைகள்:

பயனாளிகள் தங்களது தகவல்களைப் பின்வரும் வழிகளில் இற்றைப்படுத்த முடியும்

இணையதளம் (Online): உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக.

பிரதேச செயலகம்: அந்தந்த பிரதேச செயலகங்களில் உள்ள நலன்புரி நன்மைகள் அலகில் நேரடியாகச் சென்று.

விதாத்தா மையங்கள்: அருகிலுள்ள விதாத்தா (Vidatha) வள நிலையங்களின் ஊடாக.

தபால் மூலம்: பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைத் தபால் மூலம் அனுப்பி வைப்பதன் ஊடாக.

சட்ட விதிகளின்படி ஒவ்வொரு 12 மாதங்களுக்கும் ஒருமுறை தகவல்கள் இற்றைப்படுத்தப்பட வேண்டும். எனினும், பல்வேறு காரணங்களால் கடந்த சில வருடங்களாக இது இடம்பெறவில்லை.

தற்போது ஏழ்மைப் பிரிவினருக்கு மாதாந்தம் 10,000 ரூபாவும், அதி ஏழ்மைப் பிரிவினருக்கு 17,500 ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...