பாதிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (19) காலை முதல் கடல் பிராந்தியங்களில் பலத்த காற்று வீசி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக காத்தான்குடி, ஏத்துக்கால், பூநொச்சிமுனை, நாவலடி, கல்லடி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளமையால் மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் பலத்த காற்று வீசி வருவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதான மற்றும் கிளை வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் தடைப்பட்டுள்ளது.
தொடர் மழையினால் மாவட்டத்திலுள்ள பல சிறுவர் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் வெள்ள நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.
வானிலை சீரற்றுக் காணப்படுவதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


