வகையிலான அதிநவீன செய்மதிப் படங்கள் (Satellite Images) வெளியாகியுள்ளன.
கடந்த 2024ஆம் ஆண்டு இஸ்ரேலிய வான் தாக்குதல்களுக்கு இலக்கான ஒரு பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களை ஈரான் கொன்கிரீட் (Concrete) கொண்டு மூடி, பின்னர் அவற்றை மறைப்பதற்காக மணல் இட்டு மூடியுள்ளமை இப்புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
கடந்த கால மோதல்களின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் தாக்குதலுக்கு உள்ளான நிலத்தடி அணுசக்தி நிலையங்களுக்குச் செல்லும் சுரங்கப் பாதைகள் தற்போது முற்றாக மூடப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிகவும் பலமான புதிய சுரங்க நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே சேதமடைந்திருந்த ஏவுகணைத் தளங்கள் (Missile centers) மீளப் புனரமைக்கப்பட்டுள்ளமையும் புகைப்படங்களில் தெரிகின்றது.
டெஹ்ரானில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலுள்ள 'பார்ச்சின்' (Parchin) இராணுவ வளாகமே ஈரானின் மிக முக்கியமான பாதுகாப்பு வலையமைப்பாகக் கருதப்படுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இங்கு அணு ஆயுதப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக மேற்குலக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தப் பகுதிகளில் ஈரான் இவ்வாறான மறைமுக நடவடிக்கைகளை முன்னெடுப்பது சர்வதேச ரீதியாகப் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓமானின் மத்தியஸ்தத்துடன் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க - ஈரான் இடையிலான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானின் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


