Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கல்விச் சீர்திருத்தங்களைச் செய்யப் போய் அரசாங்கம் சறுக்கிய விதம்!

T

The Leader Desk

ஜனவரி 19, 2026 • 5:39 AM

கல்விச் சீர்திருத்தங்களைச் செய்யப் போய் அரசாங்கம் சறுக்கிய விதம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எங்களிடம் ஒரு சிறந்த குழு இருந்தது.
  • கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த முதலாவது வரைபு அறிக்கை 2020 ஓகஸ்ட் மாதளவில் எமக்குக் கிடைத்தது.
  • வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட '3-R' கல்வி முறையிலேயே அவர்கள் உள்ளனர்.
  • பாடசாலைக் கட்டிடங்கள் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
எழுத்து அளவு:

தாங்கியவனுமாவேன். எங்களிடம் ஒரு சிறந்த குழு இருந்தது. அத்துடன் நான் எமது மண்ணையும் பிள்ளைகளையும் நேசிக்கும் ஒரு தந்தை. எனவே, எமக்கு இடையில் எவ்வளவு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், எமது பிள்ளைகளின் கல்வியின் எதிர்காலத் திசையைத் தீர்மானிப்பதற்காக நிபந்தனையற்ற முறையிலும் தன்னார்வமாகவும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்க நான் ஒருபோதும் தயங்கமாட்டேன்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தேசிய கல்வி நிறுவனத்தின் தலைவராக கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன நியமிக்கப்பட்டார். கலாநிதி சேதரா எமது ஆலோசகராகப் பணியாற்றினார். நாம் கல்விச் சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளித்தோம். கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த முதலாவது வரைபு அறிக்கை 2020 ஓகஸ்ட் மாதளவில் எமக்குக் கிடைத்தது.

ஐந்து அல்லது ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் பிரித்தானியர்கள் வழங்கிய கல்வி மரபுகளையே நாம் இன்றும் கொண்டு செல்கிறோம். எமது பிள்ளைகள் இன்று சிக்கியிருப்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு கல்விச் சட்டகத்திற்குள் (Framework) ஆகும். வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட '3-R' கல்வி முறையிலேயே அவர்கள் உள்ளனர். ஆனால் இன்றைய உலகம் வெகுவாக முன்னேறியுள்ளது. மனிதப் புத்திசாலித்தனத்துடன் கலந்த செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளின் படைப்பாற்றல், புத்தாக்கச் சிந்தனை மற்றும் தொழில்முனைவோர் திறன்களை முன்னெடுப்பதே நவீன கல்வியின் அடிப்படையாகும். கற்றல் திறன்கள், சட்டக் கோட்பாடுகள், விமர்சனச் சிந்தனை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், குழு உணர்வு, தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பு, வாழ்க்கைத் திறன்கள் போன்றவை நவீன கல்விக்கு அவசியமான கூறுகளாக (Modules) மாறியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.

பாடசாலைக் கட்டிடங்கள் 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பரீட்சை முறை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்தது. பாடத்திட்டமும் அவ்வாறே. ஆசிரியர்கள் அனைவரும் 20ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பிள்ளைகளோ 21ஆம் நூற்றாண்டின் பிள்ளைகள். இதுவே கல்வியில் உள்ள நெருக்கடியாகும். ஆங்கிலம் ஒரு கட்டாய மொழியாக இருக்க வேண்டும். பண்டாரநாயக்க அவர்கள் சிங்களத்தை அரச கரும மொழியாக்கும் போது, அவருடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த நேரு அவர்கள் இந்தியாவில் ஆங்கிலத்தைக் கட்டாய மொழியாக்கினார்.

நான் கல்வி அமைச்சராகும் வரை பிள்ளைகள் பரீட்சைகளில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. நாமே அவற்றை மாற்றினோம்.

தற்போதைய அரசாங்கம் கல்விச் சீர்திருத்தங்களைச் செய்யப் போய் செய்த தவறை நான்கு 'ச' (S) எழுத்துக்கள் மூலம் விளக்கலாம். தற்போதைய அமைச்சரை மட்டும் நான் குறைகூறவில்லை. அரசாங்கம் செய்த அடிப்படைத் தவறு என்னவென்றால்: සාකච්ඡාව (கலந்துரையாடல்), සම්මුතිය (இணக்கப்பாடு), සන්නිවේදනය (தொடர்பாடல்) மற்றும் සංවේදීභාවය (உணர்திறன்) ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு; பிடிவாதமாகவும், தன்னிச்சையாகவும், உணர்ச்சியற்ற முறையிலும், அவநம்பிக்கையுடனும் செயற்பட்டமையாகும். அதாவது 'ச' (S) வை நிராகரித்து 'අ' (A - தன்னிச்சையான போக்கு) வைத் தழுவிக் கொண்டமையாகும்.

இது கோட்டாபய ராஜபக்ச அவர்கள் எவ்வித முன்னோடித் திட்டமும் (Pilot Project) இன்றி சேதனப் பசளையை அறிமுகப்படுத்தியதைப் போன்றது. அன்று பருவத்திற்குப் பருவம் படிப்படியாகச் செய்திருந்தால் அது இன்று வெற்றிகரமாக இருந்திருக்கும். அதை அப்படியே ஒட்டுமொத்தமாகச் செய்யப் போய் தோல்வியடைந்தது போலவே இன்றைய நிலைமையும் காணப்படுகிறது.

1974 இல் நான் O/L முடித்த கடைசித் தொகுதி மாணவன். அதன் பின்னர் NCGE அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தொடர்பாடல் குறைபாடுகளால் ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பின் விளைவாக, 1978 இல் வந்த அரசாங்கம் மீண்டும் O/L மற்றும் A/L முறைக்குச் சென்றது. இடையில் இருந்த எமது தலைமுறை வெறும் 'ஆய்வுகூட எலிகளாக' (Laboratory Rats) மாற்றப்பட்டோம். தனிப்பட்ட ரீதியில் நான் அதனால் பாதிக்கப்பட்டவன்.

கல்விச் சீர்திருத்தம் என்பது கட்டாயமான ஒன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றையும் கலாசாரத்தையும் கொண்ட எமது நாட்டில், அந்த வரலாற்று மரபுகளைப் பாதுகாத்து, எமது பிள்ளைகளுக்கு டிஜிட்டல் யுகத்தின் கதவுகளைத் திறந்துவிடுவதே சீர்திருத்தம் என்பதாகும்.

ஆனால், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தமானது வெறும் நான்கு விடயங்களுக்குள் சுருங்கிப் போனது. அதாவது 40 நிமிடப் பாடவேளையை 50 நிமிடங்களாக்குவது, பிற்பகல் 2:30 மணிவரை பாடசாலையை நடத்துவது மற்றும் 6ஆம் தர ஆங்கிலக் கையேடு (Module) பிரச்சினை என்பனவாகும்.

யாராவது கல்விச் சீர்திருத்தம் வேண்டாம் என்று கூறினால் அது காட்டுமிராண்டித்தனமானது. ஆனால் அரசாங்கம் இதனை எவ்வித உரையாடலோ தொடர்பாடலோ இன்றி, இயந்திரத்தனமாக மேலிருந்து திணிக்க முயன்றது. சேதனப் பசளை விவகாரத்தைப் போலவே சமூகத்துடன் ஒத்திசைக்காமல் நடைமுறைப்படுத்த முயன்றது. இதில் அரசாங்கத்தினதும் கல்வி அமைச்சினதும் பொறுப்பற்ற தன்மை தெளிவாகத் தெரிந்தது.

அரசியல் வேறுபாடுகள் எவ்வாறிருந்த போதிலும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்க நாம் தயார். ஆனால் அது சமூகத்துடன் கலந்தாலோசிக்கப்பட்ட, பொறுப்புணர்வுடன் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.

டலஸ் அழகப்பெரும
முன்னாள் கல்வி அமைச்சர்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...