நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் 10 வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன” என்று, 2026 வரவு - செலவுத் திட்டத்துடன் Manthri.lk 'அநுர மீட்டர்' இற்றைப்படுத்துகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கிய 30 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகள் கடந்த நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 'வெரிட்டே ரிசர்ச்' (Verité Research) நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எஞ்சியுள்ள 10 வாக்குறுதிகளில் 9 வாக்குறுதிகள் கடந்த நவம்பர் மாதம் வரை எவ்வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை எனவும், ஒரு வாக்குறுதியை ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாகவும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் கூறுகிறது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறாரா இல்லையா என்பதைக் கண்டறிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட "அனுர மீட்டர்" (Anura Meter) எனும் கொள்கைப் பிரகடன முன்னேற்றக் கண்காணிப்பின் புதிய இற்றைப்படுத்தலை (Update) வெளியிடும் போதே வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
"அனுர மீட்டர்" ஊடாக ஜனாதிபதி அநுர திசாநாயக்க தனது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கியுள்ள 30 முக்கிய வாக்குறுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.
இருப்பினும், இந்த பகுப்பாய்வானது "டித்வா" (Ditwa) சூறாவளி இந்நாட்டைத் தாக்குவதற்கு முன்னரே பூர்த்தி செய்யப்பட்டதாக வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இங்கு கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகள் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களைக் கருத்திற் கொண்டே உள்வாங்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள், ஆட்சிமுறை, ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற பிரதான கொள்கைத்துறைகள் இந்த வாக்குறுதிகள் ஊடாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக Manthri.lk இனால் முன்னெடுக்கப்படும் இந்த 'அනුர மீட்டர்' திட்டமானது, இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொள்கைப் பிரகடனங்களைக் கண்காணித்த 'மைத்திரி மீட்டர்' மற்றும் 'கோட்டா மீட்டர்' ஆகியவற்றின் அடுத்த கட்டமாகும்.
Manthri.lk என்பது இலங்கையின் ஒரேயொரு நாடாளுமன்ற கண்காணிப்புத் தளமாகும். இதனை இந்நாட்டின் மிகப்பெரிய சுயாதீன ஆய்வு நிறுவனமான 'வெரிட்டே ரிசர்ச்' நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னேற்றம் அளவிடப்படும் அனைத்து வாக்குறுதிகளினதும் தற்போதைய நிலை குறித்த முழுமையான தகவல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பெற்றுக்கொள்ள [இணையத்தளத்திற்கு] பிரவேசிக்கவும்.
அநுர மீட்டர்: 30 முக்கிய வாக்குறுதிகளில் 10 நிறைவேற்றம்!
T
The Leader Desk
ஜனவரி 19, 2026 • 5:04 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- மேலும் 10 வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன” என்று, 2026 வரவு - செலவுத் திட்டத்துடன் Manthri.lk 'அநுர மீட்டர்' இற்றைப்படுத்துகிறது.
- அதேவேளை, எஞ்சியுள்ள 10 வாக்குறுதிகளில் 9 வாக்குறுதிகள் கடந்த நவம்பர் மாதம் வரை எவ்வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை எனவும், ஒரு வாக்குறுதியை ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாகவும் வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் கூறுகிறது.
- "அனுர மீட்டர்" ஊடாக ஜனாதிபதி அநுர திசாநாயக்க தனது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கியுள்ள 30 முக்கிய வாக்குறுதிகள் கண்காணிக்கப்படுகின்றன.
- இங்கு கண்காணிக்கப்படும் 30 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகள் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களைக் கருத்திற் கொண்டே உள்வாங்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

