இடைநிறுத்துவதற்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானம் இன்று (19ஆம் திகதி) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், இதில் உயர்பதவிகளை வகிக்கும் இரண்டு அதிகாரிகளும் அடங்குகின்றனர்.
இது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) விசேட ஆளுநர் சபை கூட்டம் நேற்று முன்தினம் (17ஆம் திகதி) நடைபெற்றதுடன், அங்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து ஆளுநர் சபை விரிவாகக் கலந்துரையாடியுள்ளது.
இந்த வாரமும் ஆளுநர் சபை மீண்டும் கூடவுள்ளது. அந்த அறிக்கையிலுள்ள சில விடயங்கள் குறித்து அங்கு மீண்டும் கலந்துரையாடப்படவுள்ள போதிலும், அதற்கு முன்னரே சேவை இடைநிறுத்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கையேடுகள் தொடர்பான பிரச்சினை உருவாவதற்குக் காரணம் அதிகாரிகளின் கவனக்குறைவும் முறைப்பற்ற செயற்பாடுமே என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து முறையான விசாரணையொன்று உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அந்த விசாரணையின் பின்னர் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.


