Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அரிசியின் விலை 190 ரூபாய் தேங்காயின் விலை 80 ரூபாய் எப்படி ஏழைகள் வாழ்வது! றிப்கான் பதியுதீன்

T

The Leader Desk

மார்ச் 26, 2021 • 5:10 PM

அரிசியின் விலை 190 ரூபாய் தேங்காயின் விலை 80 ரூபாய் எப்படி ஏழைகள் வாழ்வது! றிப்கான் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆனால் அவைகளை தாண்டி இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்கு குறைந்த சம்பளம் பெறுவோருக்கு இன்றைய விலைவாசி ஓர் பேரிடியாய் அமைந்துள்ளது.
  • நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் ஒரு கூலித்தொழிலாளியின் நிலை மூன்று நேர உணவை சரியான முறையில் உண்ண முடியாத ஒரு நிலை தான் முன்னைய காலங்களிலே குறிப்பாக 15 வருடங்களுக்கு முன்னால் ஒரு ஏழை குடும்பத்தின் உணவாக சோறும் சம்பலும் காணப்பட்டது.
  • இன்று அரிசியின் விலை 190 ரூபாய் தேங்காயின் விலை குறைந்தது 80 ரூபாய் இவை இரண்டுக்கும் மாத்திரம் 270 ரூபாய்கள் தேவைப்படுகின்றன.
  • எனவே நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது இனரீதியான பிரச்சினைகளை மாத்திரம் பேசுவதை நிறுத்திவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்குரிய விடயங்களையும் பேசுங்கள்.
எழுத்து அளவு:

ஆனால் அவைகளை தாண்டி இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்கு குறைந்த சம்பளம் பெறுவோருக்கு இன்றைய விலைவாசி ஓர் பேரிடியாய் அமைந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் ஒரு கூலித்தொழிலாளியின் நிலை மூன்று நேர உணவை சரியான முறையில் உண்ண முடியாத ஒரு நிலை தான் முன்னைய காலங்களிலே குறிப்பாக 15 வருடங்களுக்கு முன்னால் ஒரு ஏழை குடும்பத்தின் உணவாக சோறும் சம்பலும் காணப்பட்டது.

இன்று அரிசியின் விலை 190 ரூபாய் தேங்காயின் விலை குறைந்தது 80 ரூபாய் இவை இரண்டுக்கும் மாத்திரம் 270 ரூபாய்கள் தேவைப்படுகின்றன.

இதை நாங்கள் சரியான முறையில் பார்த்தோமானால் இது இன்று ஒரு பணக்கார உணவாகவே மாறி இருக்கிறது. அந்த அளவுக்கு எமது நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

எனவே நான் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது இனரீதியான பிரச்சினைகளை மாத்திரம் பேசுவதை நிறுத்திவிட்டு மக்களின் அன்றாட வாழ்க்கைக்குரிய விடயங்களையும் பேசுங்கள்.

வெறும் அரசியலை மாத்திரம் உங்கள் நோக்கமாக கொண்டு நடக்க வேண்டாம் அரசியல் கடந்த பல பிரச்சினைகளில் மக்கள் இன்று தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படுகிறது. என்று அரசு அறிவிக்கின்றது ஆனால் அந்த பொருட்களை வாங்க கடைக்குச் சென்றால்  அவர்கள் குறிப்பிட்ட அந்த பொருட்கள் இருப்பதில்லை.

அதுமட்டுமல்லாமல் வெங்காயத்திற்கு ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டால் அங்கு சமையல் எரிவாயுக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்படுகிறது ஏதோ ஒரு வகையில் பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறதே தவிர மக்களுக்கு மக்களின் தேவைக்கு பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதில்லை.

பணபலம் கொண்டவர்களுக்கு இந்த விலை உயர்வின் தாக்கம் தெரிவதில்லை ஆனால் அன்றாடம் கூலித்தொழில் செய்யும் ஒரு கூலி அவனுடைய வருமானத்தின் மூலம் தனது குடும்பத்தை கொண்டு செல்வது பாரிய ஒரு சவாலாக இன்று காணப்படுகிறது.

எனவே இனவாதத்தை மாத்திரம் நீங்கள் கண்கொண்டு பாராமல் மக்களின் தேவைகளையும் சற்று பாராளுமன்றத்தில் முன்வையுங்கள் இதை நான் எந்த பாராளுமன்ற உறுப்பினரையோ அல்லது கட்சியையோ நான் குறிப்பிட்டுக் கூறவில்லை பொதுவாக இருக்கின்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...