28 ஆம் தேதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அரசாங்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அங்கு சமூகமளித்திருந்த கட்சித் தலைவர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது என்று கடுமையாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகா சங்கத்தினரின் வேண்டுகோளுக்கமைய கொவிட் தொற்று நோயினால் மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து மாகாண சபைகளும்  இப்போது இயற்கையான மரணத்தை எதிர்கொள்கின்றன என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

கட்சித்தலைமைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் வாசுதேவ  நாணயக்கார கருத்து தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தற்காலிக அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

இந்தியாவிடம்தான் நாம் கேட்க வேண்டும் சிறி லங்கா சுதந்திர கட்சி

கட்சி தலைமைக் கூட்டத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதோடு, அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கும் விளக்கமளிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, ​​சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிரி ஜயசேகர, கொரோனா வைரஸ் பரவுவதால், இந்த நேரத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

ஆனால் ஜே. ஆர். ஜெயவர்த்தனனால் நிறுவப்பட்ட மாகாண சபை அமைப்பு செயல்படுத்தப்படுமா இல்லையா என்பதை எம்மால் தீர்மானிக்க முடியாது இது இந்தியாவுடன் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்றார்.

இருப்பினும், அனைத்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களையும் திட்டமிட்டபடி நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகிறார்.

நெடுஞ்சாலை அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்

நாங்கள் இப்போது புதிய அரசியலமைப்பு முறையைப் பயன்படுத்துவது பற்றி கலந்துரையாடி வருகின்றோம்," வரவிருக்கும் அனைத்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களையும் திட்டமிட்டபடி நடத்த நாங்கள் தற்போது தயாராகி வருகிறோம்.மாகாண சபை தேர்தல் தொடர்பாக மகா சங்கத்தினரிடமிருந்து ஒரு எதிர்ப்பு எழுந்துள்ளது. ஒரு கட்சியாக, இந்தத் தேர்தல்கள் அனைத்தையும் சரியான நேரத்தில் நடத்துவதே எங்கள் முடிவு என்று தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி