எந்தவொரு இலங்கையையும் அவரது மரணத்திற்குப் பிறகு தனது தாயகத்தில் கண்ணியத்துடன் அடக்கம் செய்யும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.'ஒரு நியாயமான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தின்' தலைவரான கரு ஜெயசூரிய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது

உலகப் புகழ்பெற்ற நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும், இலங்கை முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் அவர்களின் மத நடைமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு 'ஒரு நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்' உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது இந்தக் கோரிக்கை​ அரசாங்கத்திடமும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்...

இலங்கையில் பிறந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் அல்லது வேறு எந்த தேசிய இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் அவர்கள் இறந்த பின்னர் தங்கள் தாயகத்தில் கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பை வழங்காமல் இருப்பதும் இலங்கையரை, வேறொரு நாட்டில் வலுக்கட்டாயமாக அடக்க நடவடிக்கை எடுப்பதும் ஒரு பெரிய அவமானமாக இருக்கும்.

அத்தகைய முயற்சியை ஒரு நாடாக இலங்கை எடுக்குமாயின் உலக நாடுகள் இலங்கையை கடுமையாக குறைத்து மதிப்பிடும்.

கொவிட் தொற்றுநோயால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களை அடக்கம் செய்ய இலங்கை அரசாங்கம் மாலை​தீவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்திகளைப் பற்றி ஒரு நியாயமான சமுதாயத்திற்கான தேசிய இயக்கம் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தது, மேலும் ஒரு அமைப்பாக நாம் எமது தாய்நாட்டை இப்படி இழிவுபடுத்துவதால் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறோம்.

கொவிட் 19 வைரஸால் இறக்கும் ஒருவரின் இறுதிச் சடங்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறை உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த அளவுகோல்களுக்கு அப்பால் செல்லக்கூடாது, அத்துடன் மருத்துவத் துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளுக்கு அப்பாலும் செல்லக்கூடாது.

எந்தவொரு பிரச்சினையின் அடிப்படையிலும் இதுபோன்ற பாரபட்சமற்ற நிலைப்பாடுகளை நாம் எடுத்தால், அது நமது தாய்நாட்டை நாகரிக உலக சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது. இது குறித்து ஆழ்ந்த புரிதல் இலங்கை அரசுக்கு இருக்க வேண்டும்.

இந்த முக்கியமான விடயத்தில் அரசாங்கம் பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வந்தாலும், இதுவரை ஒரு திட்டவட்டமான முடிவை எடுப்பதில் தாமதம் காட்டுவது புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்று வெளி உலகில் மதிப்பிழந்த ஒரு கருத்தை உருவாக்க இது ஊக்குவிக்கிறது.

இலங்கைக்கு எதிராக செயற்பட முற்படும் எந்தவொரு தீவிரவாத சக்திகளுக்கும் தேவையான இடத்தை இது உருவாக்குகிறது.

உலகெங்கிலும் உள்ள பல முக்கிய நகரங்களில் இலங்கைக்கு எதிராக ஏற்கனவே நடந்த போராட்டங்களில் கவனம் செலுத்துவதன் இதனை தெரிந்துகொள்ளலாம்.

அதன்படி, நீதி, நியாயம் மற்றும் மனிதநேயம் என்ற பெயரில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்குமாறு ஒரு நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற நிபுணர்களின் ஆலோசனையின் பேரில், உலக சுகாதார அமைப்பு (W.H.O) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் அவர்களின் மத சடங்குகளுக்கு ஏற்ப, தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி