கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது  மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல வெறும் ஊடக விம்பங்களே மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், ​பொலிஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே. .

பொலிஸ் லத்தி மூலம் இந்தியர்களை அடக்கி விடலாம் என்றால் வெள்ளையன் அதைச் செய்திருப்பானே வெளியேறி இருக்க மாட்டானே லத்தி மூலம் அடக்க முடியாத வெறியில்தான் வெள்ளையரால் 1943ல் வங்காள பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது .

ஹிட்லர் உலகப் போரில் 60 லட்சம் பேரைக் கொலை செய்தான்.

ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் செயற்கைப் பஞ்சத்தை இந்தியாவில் 1943 ல் உருவாக்கி கிட்டத்தட்ட 70லட்சம் பேரைக் கொலை செய்தான். 

வங்காளப் பஞ்சம் ஏற்பட்டது எப்படி!

நீர்ப்பற்றாக்குறையோ,மண்வளப் பற்றாக்குறையோ,விளைச்சலில் பற்றாக்குறையோ இல்லாத சூழலில் பஞ்சம் எப்படி 1943 ல் இந்தியர்களைப் பலி கொண்டது .விளைவிக்கப்பட்ட தானியங்கள் ஐரோப்பிய கார்ப்பரேட்டுகளால் இங்கிலாந்துக்குக் கடத்தப்பட்டன,விவசாயிகள் கொல்லப்பட்டனர்,விளைநிலங்கள் அபகரிக்கப்பட்டன .

சர்ச்சில் என்ற கொடூரனால் செயற்கைப் பஞ்சம் மூலம் மக்கள் கொல்லப்பட்டனர்.விளைநிலங்கள் பிடுங்கப்பட்டன ஆக விளை பொருட்களையும்,விளை நிலங்களையும் பறி கொடுத்தால் பஞ்சத்தில் மக்கள் மடிவார்கள் என்பதுதான் வரலாறு கூறும் உண்மை அன்றைய வைஸ்ராய் வெவல் , சர்ச்சிலிடம் கூறிய கருத்தும் அதுதான்.

இந்திய மக்களை பஞ்சம் என்ற பெயரில் சர்ச்சில் படுகொலை செய்வதைக் கண்டு பொங்கி எழுந்த இங்கிலாந்து மக்கள் சர்ச்சிலைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்து அட்லியைப் பதவியில் அமர்த்தினர் .

வரலாறு மீண்டும் திரும்புகிறது .

புதிய வேளாண் சட்டத்தின் மூலம் நிலங்கள் விவசாயிகள் கைகளை விட்டுப் போகப் போவதை உணர்ந்துதான் .செயற்கைப் பஞ்சத்திலிருந்து மக்களையும்,விளைநிலங்களையும் காப்பாற்றவே இன்று இந்திய விவசாயிகள் சாதி மத வேறுபாடின்றி டெல்லியை அரணாகச் சூழ்ந்து நிற்கின்றனர்.

Unpopular ஆகி விட்ட மோடியாலும்,அமித்சாவாலும் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவுக்கு மக்கள் மட்டுமல்ல,கார்ப்பரேட்டுகளும் வந்து விட்டார்கள்.

ஆக,விவசாயிகளின் மாபெரும் இந்தப் போராட்டம் இந்திய அரசியல் வரலாற்றையே மாற்றி எழுத ஆரம்பித்து விட்டது,பெரும் மகிழ்ச்சி 

இனி எதிர்பாராத பல நன்மைகள் இந்திய மக்களுக்குக் கிடைக்க இருக்கின்றது,

இத்தகைய மாபெரும் வரலாற்று நிகழ்வினை தமிழக மக்கள் கூர்ந்து நோக்கா வண்ணம் ஒரு முதிய நடிகரை வைத்து ஊடகங்கள் மூலமாக இன்று ஒரு நாடகம் நடத்தப்பட்டது .

போராட்டத்தில்...

செங்கொடி_ஏந்தி

96,000 ட்ராக்ட்டர்கள்

22,000 லாரிகள்

6 மாதத்திற்கான உணவு பொருட்கள்

குளிரை தாங்கும் போர்வைகள்

செல் ஃபோன் சார்ஜர்கள் உள்ளிட்ட

அனைத்து விதமான பொருட்களுடன்

தலைநகர் டில்லியில்

1 கோடியே 40 லட்சம் விவசாயிகள் களத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள்..!!

உலகிலேயே மக்கள் அதிகமாக கூடி

முன்னெடுத்த போராட்டம் இதுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மோடியின் அடிவருடி ஊடகங்கள்

இந்த வரலாற்று செய்தியை மூடி மறைக்க முயல்கின்றன.

விவசாயிகளின்  போராட்டம் வெல்லட்டும்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி