Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

17 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை; தென்னிந்திய நடிகர்கள் ஆவேசம்!

T

The Leader Desk

மே 18, 2026 • 5:06 AM

17 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்கவில்லை; தென்னிந்திய நடிகர்கள் ஆவேசம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
  • இதேவேளை, யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத் தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார்.
  • பெரும்பான்மையின அரசின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மையின மக்களான தமிழ் மக்கள், 30 ஆண்டுகளாக உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினர்.
  • கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது மௌனிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு துக்க தினம். இது ஒரு கறுப்பு தினம். எமது இதயத்தை ரணமாக்கிய ஒரு தினம். அன்று எமது இனம் எப்படி துடிதுடித்திருக்கும். எப்படி வேதனைப்பட்டிருக்கும். அந்த உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். ஈழம் என்று மலரும் என்று எனது மனம் தினம் தினம் ஏங்குகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நண்பர் விஜய் ஒரு இக்கட்டான கட்டத்தில் இருக்கிறார் என்றவுடன் காங்கிரஸ் கரம் நீட்டுகிறது என்றவுடன் இன்று திமுக கவலைப்படுகிறதே, இதே காங்கிரஸ் தானே அன்று எமது ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தார்கள்.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து சிங்கள இராணுவத்துக்கு துணை போனார்களே எப்படி? என்னுடைய தொப்புள்கொடி பந்தங்களுக்கு அந்த துன்பத்தை அள்ளிக் கொடுத்தார்களே எப்படி? முள்ளிவாய்க்காலில் அன்று இரத்த ஆறினை ஓடவிட்டார்களே எப்படி? என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Nizhalgal Ravi - Wikipedia

இதேவேளை, யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத் தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என தென்னிந்திய பிரபல திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி கவலை வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையின அரசின் அடக்குமுறையை எதிர்த்து சிறுபான்மையின மக்களான தமிழ் மக்கள், 30 ஆண்டுகளாக உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடினர்.

கடந்த 2009 மே 18 அன்று சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் அந்த யுத்தமானது மௌனிக்கப்பட்டது.

இந்த யுத்தத்தில் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின. இந்த யுத்தத்தில் பல போர் குற்றங்கள் இடம்பெற்றன. ஆனால் 17 வருடங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட இனம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இவை அனைத்தும் முடிவுக்கு வந்தால்தான் முள்ளிவாய்க்கால் மண்ணில் பலியாகிய இலட்சக்கணக்கான உயிர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும்.

எமது தொப்புள்கொடி உறவுகள் உயிர்களை, உடைமைகளை இழந்து நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் விதைக்கப்பட்ட உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழத்தமிழ் உறவுகளுக்காக எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை அந்த உறவுகளுக்கும் சர்வதேச சக்திகளுக்கும் எடுத்துக்கூற விரும்புகிறேன்.

என்றும் ஈழத்தமிழர்களின் நிழலாக இந்த நிழல்கள் ரவி இருப்பார் என உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...