Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சுவிஸிலிருந்து வந்தவர் சண்டிலிப்பாயில் வெட்டிப் படுகொலை; தடையங்களை அழிக்க பாரிய திட்டம்!

T

The Leader Desk

மே 18, 2026 • 4:38 AM

சுவிஸிலிருந்து வந்தவர் சண்டிலிப்பாயில் வெட்டிப் படுகொலை; தடையங்களை அழிக்க பாரிய திட்டம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • சுவிஸ் நாட்டில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 66 வயதுடைய வள்ளிபுர சந்திரசேகர் எனும் முதியவர், சங்குவேலியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
  • கொள்ளையர்கள், முதியவர் அணிந்திருந்த சுமார் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சம் ரூபா ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
  • மேலும், தடயங்களை அழிக்கும் நோக்கில் கையுறைகள் அணிந்து செயல்பட்டதுடன், மோப்ப நாய் வழித்தடத்தை குழப்பும் வகையில் மிளகாய் தூள் தூவி தப்பியதாகவும் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 66 வயதுடைய வள்ளிபுர சந்திரசேகர் எனும் முதியவர், சங்குவேலியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் வீட்டின் புகைக்கூட்டின் (chimney) வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், முகத்தை துணிகளால் மறைத்துக்கொண்டு வீட்டிற்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கொள்ளையர்கள், முதியவர் அணிந்திருந்த சுமார் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சம் ரூபா ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

மேலும், தடயங்களை அழிக்கும் நோக்கில் கையுறைகள் அணிந்து செயல்பட்டதுடன், மோப்ப நாய் வழித்தடத்தை குழப்பும் வகையில் மிளகாய் தூள் தூவி தப்பியதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், கொள்ளையின்போது எந்த கைத் தொலைபேசியையும் எடுத்துச் செல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த முதியவர் 14ஆம் திகதிக்குப் பிறகு காணாமல் போன நிலையில்,

நேற்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற உறவினர் குறித்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் கண்டறிந்துள்ளனர்.

பின்னர் தகவலறிந்து வந்த மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த குறித்த முதியவரை பணம் நகைக்காக கொன்ற இச் சம்பவம் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுவிஸிலிருந்து வந்தவர் சண்டிலிப்பாயில் வெட்டிப் படுகொலை; தடையங்களை அழிக்க பாரிய திட்டம்! | Tamil Leader | We Lead the Nation