Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கேட்டுப் போராடிய தாய் உயிரிழப்பு!

T

The Leader Desk

மே 18, 2026 • 4:33 AM

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கேட்டுப் போராடிய தாய் உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த மேலும் ஒரு தாய், நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளார்.
  • அன்று பிறந்த அவர், தனது குடும்ப உறுப்பினருக்காக மட்டுமன்றி வடக்கு கிழக்கெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்காக நீதி கோரி இடம்பெற்ற பல்வேறு போராட்டங்கள், கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊடக சந்திப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார்.
  • மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்மணி நேற்று காலமானார்.
எழுத்து அளவு:

நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த மேலும் ஒரு தாய், நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்மணி நேற்று காலமானார்.

05.09.1951 அன்று பிறந்த அவர், தனது குடும்ப உறுப்பினருக்காக மட்டுமன்றி வடக்கு கிழக்கெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்காக நீதி கோரி இடம்பெற்ற பல்வேறு போராட்டங்கள், கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊடக சந்திப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார்.

மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து செயல்பட்ட அவர், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் குரல் கொடுத்துவரும் போராட்டத் தாய்மார்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.

இவரின் மறைவு, பல ஆண்டுகளாக நீதி தேடி தொடர்ச்சியாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...