Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஆறாத வடுவின் 17ஆம் ஆண்டு; முள்ளிவாய்க்காலில் இன்று பிரதான நினைவேந்தல் நிகழ்வு!

T

The Leader Desk

மே 18, 2026 • 4:19 AM

ஆறாத வடுவின் 17ஆம் ஆண்டு; முள்ளிவாய்க்காலில் இன்று பிரதான நினைவேந்தல் நிகழ்வு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
  • இன்று காலை 06:00 - 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில்இ இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம் பெறும்.
  • காலை 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும்.
  • காலை 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும்.
எழுத்து அளவு:

நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.

இன்று காலை 06:00 - 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில்இ இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம் பெறும்.

காலை 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். காலை 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும். காலை 10:30 மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்படும்.

காலை 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும். காலை 10:30 மணிக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப் படும். ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு - கிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்,

'நாம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனப் படுகொலையைச் சந்தித்த மக்கள். அந்த அநீதிக்கு எதிராக எமது எதிர்ப்பைப் பதிவு செய்யவும், உலகிடம் நீதியைக் கோரவும் இந்த நினைவேந்தல் மிக முக்கியமானது. அரசியலைக் கடந்து தமிழ்த்தேசமாக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் அணி திரண்டு எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அனைத்துத் தமிழ மக்களையும் அன்புடன் அழைக்கின் றோம்' என்று தெரிவித்தார்.

இந்த நினைவேந்தல் பணிகளுக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிரதேச மக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலுமுள்ள தமிழ் மக்கள் நாளை ஒரே நேரத்தில் நினைவேந்தலில் ஈடுபடவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...