Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

03 தமிழர்களின் உயிர்கள் பறிபோயும் கிடைக்காத நீதி: பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கனடா விபத்து வழக்கின் தீர்ப்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2026 • 5:54 AM

03 தமிழர்களின் உயிர்கள் பறிபோயும் கிடைக்காத நீதி: பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கனடா விபத்து வழக்கின் தீர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிர்களைப் பறித்த கோர விபத்து தொடர்பான வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட நபர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
  • ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் திகதி, மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதிச் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றது.
  • இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்: பதீரன் புவனேந்திரன் (21 வயது) - சம்பவ இடத்திலேயே பலி.
  • நெலுக்ஷனா புவனேந்திரன் (23 வயது) - சம்பவ இடத்திலேயே பலி.
எழுத்து அளவு:

உயிர்களைப் பறித்த கோர விபத்து தொடர்பான வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட நபர் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது.

2022ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் திகதி, மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதிச் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றது. சிவப்பு சமிக்ஞையை (Red Light) மீறிச் சென்ற ஒரு கனரக மண் ஏற்றிச் செல்லும் வாகனம் (Dump Truck), ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த கார் மீது மோதியது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்:

பதீரன் புவனேந்திரன் (21 வயது) - சம்பவ இடத்திலேயே பலி.

நெலுக்ஷனா புவனேந்திரன் (23 வயது) - சம்பவ இடத்திலேயே பலி.

ஸ்ரீரதி சண்முகநாதன் (52 வயது - தாய்) - படுகாயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி பலி.

இந்த அனர்த்தத்தினால் ஒரு தந்தையும் மகனும் தமது முழுமையான குடும்பத்தையும் இழந்தனர். இதில் Vaughan நகரை சேர்ந்த பார ஊர்தி ஓட்டுநர் 46 வயதான Anthony BAGLIERI மீது குற்றச் சாட்டுகள் பதிவாகின.

2022இல் நிகழ்ந்த இந்த விபத்துக்கான நீதித்துறை விசாரணை Newmarket நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. March 2 ஆரம்பித்த இந்த வழக்கு விசாரணை March 9 முடிவடைந்த நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை (17) வழங்கப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பு - ஏப்ரல் 17, 2026:

பல வருடங்களாக இழுபறியில் இருந்த இந்த வழக்கு, 2026இல் நீதிபதியால் மாத்திரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அனைத்துச் சாட்சியங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்டவர் மீது குற்றவியல் பொறுப்பை (Criminal Liability) உறுதிப்படுத்த போதிய சட்ட ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவரை விடுவித்துள்ளது.

"சிவப்பு விளக்கை மீறிச் சென்று மூன்று உயிர்கள் பறிபோகக் காரணமான ஒருவருக்கு, சட்டப்படி எந்தத் தண்டனையும் வழங்கப்படாமல் போனது எப்படி?" என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. இது சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாகவும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமைக்கான (Careless Driving) தண்டனை கூட வழங்கப்படாமை குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரச தரப்பு (Crown) மேன்முறையீடு செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சமூகமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்த பதீரன், நெலுக்ஷனா மற்றும் ஸ்ரீரதி ஆகியோருக்காக நீதி கோரும் போராட்டம் ஓயாது எனவும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படும் வரை குரல்கள் ஓயாது எனவும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றது.

நீதிமன்றத் தீர்ப்பு முடிவல்ல, நீதிக்கான போராட்டத்தின் அடுத்த கட்டம் இங்கிருந்து ஆரம்பமாவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தீர்ப்பு வழங்கப்படும் தினத்தில் தமிழர்களை நீதிமன்றில் பிரசன்னமாகுமாறு தனது குடும்பத்தை இழந்த பூபலசிங்கம் புவனேந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்திருந்தார்.

குறிப்பிட்ட வழக்கின் நீதிமன்ற விசாரணையின் போதும் தமிழர்கள் சிலர் அங்கு நேரடியாக கலந்து கொண்ட நிலையில், இன்றைய இறுதித் தீர்ப்பின் போதும், பெருமளவான தமிழர்கள் நீதிமன்றத்துக்கு அருகில் கூடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.

672677344_10106404917551407_3392483965870300027_n.jpg

 

672679710_10106404918439627_2874332117351023641_n.jpg

 

672680165_10106404917631247_7342902619412202421_n.jpg

 

672685761_10106404917960587_3597017309330238504_n.jpg

 

672688324_10106404918714077_3712927761593587418_n.jpg

 

672690943_10106404919981537_7657322076379756704_n.jpg

 

673868161_10106404917845817_7078080760237543377_n.jpg

 

675533515_10106404919602297_5103274336674579059_n.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...