முறைமை, இன்று (18) நள்ளிரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
வழமையான ஒதுக்கீடு:
இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே, வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு (Quota) வழங்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தற்காலிக நீக்கம்:
சித்திரைப் புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஒற்றை - இரட்டை இலக்க முறை:
இன்று நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் QR முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.
அத்துடன், வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் (Odd/Even system) எரிபொருள் வழங்கும் முறையும் தொடர்ந்து பின்பற்றப்படும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படக்கூடிய நெரிசல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மீண்டும் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


