குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) இன்றைய தினம் (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட தனிப்பட்ட விஜயத்திற்காக 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.
நீதிமன்றில் இன்று இது தொடர்பான விடயங்களை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், குறித்த விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்வதற்காக பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் ஊடாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


