கைவிட்டு மீண்டும் தோட்டப் புறங்களில் தொழிலுக்குத் திரும்பியுள்ளனர்.
இதன் காரணமாக உணவகங்களை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமையே, கொழும்பிலுள்ள உணவகங்களில் பணியாற்றிய மலையக இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் வெளியேறுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபா வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
பொரள்ளை, மருதானை உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளில் உள்ள உணவகங்களில் பரிமாறுபவர்கள் (Waiters), சமையல்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுப்பட்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையகத்தைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.


