பொரளை கனத்தையில் கட்டப்பட்ட கபன் சீலைகள்,வெள்ளைத் துணிகள் என்பவை பொலீஸாரால் அகற்றப்பட்டிருக்கின்றன.மா நகரசபை முதல்வர் அகற்ற வேண்டாம் என்று கூறியும் அகற்றப்பட்டிருகின்றன.மீண்டும் கட்டப்போவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அகற்றட்டும் அவர்கள்.எத்தனையை அவிழ்ப்பார்கள் பார்க்கலாம்.ஒரு கைக்குட்டை அளவு வெள்ளை நிற கபன் துணிக்கா இத்தனை பயம் அவர்கட்கு. இதற்கே அவர்கள் இத்தனை தொல்லை கொள்கிறார்கள் என்றால் எத்தனை பலவீனமானவர்கள் அவர்கள்.

அகற்றட்டும்.ஆறடி முழச் சீலையில் எத்தனை கைப்பிடியளவு சீலை கிழிக்கலாம் என்று கற்றுக் கொடுப்போம்.எத்தனை முடிச்சை அவிழ்ப்பாய் பார்க்கலாம்.உன் கை வலிக்க, வியர்வை வழிய அவிழு.எங்கள் கை ஓங்கக் கட்டுவோம்.கண்ணியம் கண்களில் வழியக் கட்டுவோம்.இதுதானடா எங்கள் கபன் சீலையின் கண்ணியம்.ஒரு கைக்குட்டையளவு வெள்ளைத் துணிக்குக் கதி கலங்குபவனா நீ.
கட்டிக் கொண்டே இருப்போம்.அவர்கள் அவிழ்த்துக் கொண்டே இருக்கட்டும்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி