இலங்கையை தவிர அனைத்து நாடுகளும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிதசேனாரட்ன தெரிவித்துள்ளார்.

சிலபிரிவு மக்களுக்கு எதிரான இன உணர்வின் அடிப்படையிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது என ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார். 

முஸ்லீம்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் உடல்கள் தகனம் செய்யப்படுவதில்லை உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 

உடல்களை புதைப்பதால் நிலடித்தடிநீர் பாதிக்கப்படும் என நிபுணர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் சிலர் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் மஹரசிறைக்கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அவர்களுடைய விவகாரத்தில் மாத்திரம் இது ஏன் பொருந்தவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி