அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி மாலை முதல் நேற்று 10ம் திகதி 15 வது நாளாகவும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்து வருவதனால், இப்பிரதேசங்கள் எங்கும் சனநடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் பொலிஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளிச் செல்வதும், உள்வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் அரச அதிகாரிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றது. வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் அன்றாட கூலித் தொழில் செய்யும் பொது மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் எவ்வித வருமானமுமின்றி கஷ்ட நிலமைக்கு ஆளாகியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு குறிப்பாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும், சமுர்த்தி பெறுவதற்கு காத்திறுப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் அரசாங்கத்தினால் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக 05 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதி விநியோகிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அன்றாடம் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணத்தை வழங்குமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு கிரமமான முறையில் சுகாதார வைத்தியதிகாரிகள் பிரிவுகள் தோறும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி