Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஒரே குழியில் புதைக்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களைத் தோண்டி பில்லி சூனியம் செய்த மாந்திரீகக் கும்பலைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணை!

T

The Leader Desk

ஜூன் 17, 2026 • 5:14 AM

ஒரே குழியில் புதைக்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்களைத் தோண்டி பில்லி சூனியம் செய்த மாந்திரீகக் கும்பலைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொஸ்கம பரணகம பொது மயானத்தில் கடந்த மே மாதம் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் தோண்டப்பட்டதால் பெரும் பரபரப்பு.
  • கடந்த மே மாதம் 16ஆம் திகதி கொஸ்கம - தாவல்கொட கால்வாயில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்களே கொஸ்கம - பரணகம பொது மயானத்தில் இவ்வாறு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
  • அவ்வாறு புதைக்கப்பட்டிருந்த சடலங்களின் குழியை, கடந்த 14ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த ஒரு கும்பல் தோண்டி, அங்கு மாந்திரீகத் தொவில் சடங்குகளை மேற்கொண்டுள்ளது.
  • அந்த லொறி வண்டியைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், அது கொஸ்கம வித்தியால மாவத்தையிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளதைக் கண்டுபிடித்தனர்.
எழுத்து அளவு:
  • கொஸ்கம பரணகம பொது மயானத்தில் கடந்த மே மாதம் நீரில் மூழ்கி உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் தோண்டப்பட்டதால் பெரும் பரபரப்பு.

  • மனைவியின் நோயைக் குணப்படுத்த மஹியங்கனையிலிருந்து மாந்திரீகர்களை வரவழைத்து நள்ளிரவில் தொவில் நடத்திய கணவன்.

  • மயானக் குழியில் சடலங்கள் திருடப்பட்டதாக உறவினர்கள் சந்தேகம்; கிராம மக்கள் முன்னிலையில் மீண்டும் தோண்டப்பட்டு சவப்பெட்டிகள் உறுதி செய்யப்பட்டன.

கொஸ்கம - பரணகம பொது மயானத்தில் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இருந்த குழியைத் தோண்டி, மாந்திரீகச் சடங்கு (தொவில்) நடத்திய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளைக் கொஸ்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 16ஆம் திகதி கொஸ்கம - தாவல்கொட கால்வாயில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடல்களே கொஸ்கம - பரணகம பொது மயானத்தில் இவ்வாறு ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

அவ்வாறு புதைக்கப்பட்டிருந்த சடலங்களின் குழியை, கடந்த 14ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த ஒரு கும்பல் தோண்டி, அங்கு மாந்திரீகத் தொவில் சடங்குகளை மேற்கொண்டுள்ளது.

CCTV காட்சிகள் மூலம் அம்பலமான உண்மை

மயானத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைப் பரிசோதித்த போது, மயானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறிய லொறி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் பயணிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்த லொறி வண்டியைப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், அது கொஸ்கம வித்தியால மாவத்தையிலுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளதைக் கண்டுபிடித்தனர். அவ்வீட்டின் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையின் போது, தனது மனைவியின் தீராத நோய் நிலைமை காரணமாக, மஹியங்கனைப் பகுதியிலிருந்து மாந்திரீகர்களை வரவழைத்து அந்த மயானக் குழியின் மீது தொவில் சடங்கு நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்துக் கைது செய்யப்பட்ட வீட்டின் உரிமையாளர் நேற்று (16) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மயானத்தில் வெடித்த பதற்றம்: சவப்பெட்டிகள் திருடப்பட்டதா?

நீதிமன்ற உத்தரவின்படி, தோண்டப்பட்டிருந்த அந்த மயானக் குழியை மீண்டும் மூடிவிடுமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர். எனினும், மாந்திரீகக் கும்பல் சவப்பெட்டிகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்களுக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டதால் நேற்று மாலை மயானத்தில் பெரும் பதற்ற நிலை உருவானது.

அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அந்தக் குழி மீண்டும் ஆழமாகத் தோண்டப்பட்டு, அதற்குள் சவப்பெட்டிகள் (Coofins) பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னரே, சடலங்கள் மீண்டும் முறைப்படி மூடி அடக்கம் செய்யப்பட்டன.

இச்சம்பவம் குறித்து கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தலைமறைவாகியுள்ள பிரதான மாந்திரீகர் உள்ளிட்ட கும்பலைத் தேடி வருவதாகவும், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...