எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக குடும்ப சுகாதார சேவை பணியகம் தெரிவித்துள்ளது.
சதவீத அதிகரிப்பு:
கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, குறைந்த எடையுடனான சிசுக்களின் பிறப்பு வீதமானது 15.1% ஆக உயர்வடைந்துள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் 14.6% ஆகக் காணப்பட்டது.
அதிக பாதிப்புள்ள மாவட்டம்:
இந்த ஆய்வின்படி, குறைந்த எடையுடன் கூடிய பிறப்புகள் அதிகளவில் நுவரெலியா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. அங்கு இதன் சதவீதம் 23% ஆகும்.
மருத்துவ வழிகாட்டல்கள்:
சாதாரண நிலைமையில் ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் எடை 3 கிலோகிராம் முதல் 3.5 கிலோகிராம் வரை இருக்க வேண்டும் என வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எடை குறைதல்:
பிறந்து முதல் வாரத்தில் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் உடல் எடை 10% வரை குறைய வாய்ப்புள்ளது.
எச்சரிக்கை:
எனினும், அதற்கு அடுத்தடுத்த வாரங்களிலும் குழந்தையின் எடை தொடர்ந்து குறையுமானால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய போஷாக்கு நிலை மற்றும் தாய்மார்களின் ஆரோக்கியம் தொடர்பாக எழுந்துள்ள சவால்களே இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனச் சுகாதாரத் துறை அவதானிகள் கருதுகின்றனர்.


