வைத்து வெளிநபர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாடசாலையில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் சி.சி.ரி.வி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்த போது, வெளிநபர் ஒருவர் பாடசாலைக்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் எந்த இடத்தினூடாக பாடசாலைக்குள் நுழைந்தார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலையில் பல வருடங்களாகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அண்மையில் நீக்கிவிட்டு, புதியவர்களைப் பணியில் அமர்த்தியமை இவ்வாறான பாதுகாப்பற்ற நிலை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளதாகப் பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.


