Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

2025ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

T

The Leader Desk

பிப்ரவரி 17, 2026 • 3:35 AM

2025ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களுள் 382,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகளாவர்.
  • அத்துடன் 69,214 தனியார் விண்ணப்பதாரிகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
  • நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்காக 531 ஒருங்கிணைப்பு நிலையங்களும் 33 பிரதேச சேகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • இம்முறை 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கால அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.
எழுத்து அளவு:

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களுள் 382,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகளாவர். அத்துடன் 69,214 தனியார் விண்ணப்பதாரிகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்காக 531 ஒருங்கிணைப்பு நிலையங்களும் 33 பிரதேச சேகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை 2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கால அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள கால அட்டவணையை மாத்திரம் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த வருடத்தை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் பாட ஒழுங்கு வரிசை 5, 6, 7 மற்றும் 8 ஆம் நாட்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், சரியான கால அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறு இந்திகா குமாரி லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல வேண்டும்.

பிற்பகல் நேரப் பரீட்சைகள் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சார்த்திகள் நண்பகல் 12.30 மணிக்குள் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகள், புளூடூத் (Bluetooth) கருவிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புக்கள் அல்லது ஆவணங்கள் எதனையும் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சை முடியும் வரை தமது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்த முடியும்.

தனியார் விண்ணப்பதாரிகள் தேவையேற்படின் கிராம உத்தியோகத்தரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் என ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

மேலும், அனைத்துப் பரீட்சார்த்திகளும் வினாத்தாளுக்கு விடையளிக்க முன்னதாக அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து, அனைத்துப் பகுதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நேரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, பரீட்சை எண்ணைச் சரியாகக் குறிப்பிட்டு விடையளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

கையெழுத்துத் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் 'டிபெக்ஸ்' (Tipp-Ex) திரவத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், தவறு ஏதேனும் ஏற்படின் அதனை ஒரு கோட்டினால் கோடிட்டு வெட்டிவிட்டு மீண்டும் விடையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள்களைச் சரியாக இணைப்பதில் அவதானமாக இருக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சை நடைபெறும் காலத்தில் பரீட்சை மண்டப விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் பேண வேண்டும் என்பதுடன், முகம் தெளிவாகத் தெரியும் வகையில் பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும்.

அத்துடன், எக்காரணம் கொண்டும் ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது எனவும், அவ்வாறான செயற்பாடுகள் பெறுபேறுகள் இடைநிறுத்தப்படுவதற்கு ஏதுவாக அமையலாம் என்றும் எச்சரித்த ஆணையாளர் நாயகம், இடைவேளை நேரங்களிலும் ஏனையவர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...