பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (17) பிற்பகல் இந்தியா நோக்கிப் பயணமாகவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி அනුர குமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், இம்மாநாட்டின் போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்காலப் போக்குகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிப்பதற்கு அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது.
இவ்விந்தியப் பயணத்தின் போது, ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டு அரச தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் இம்மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இப் பயணத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.


