Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு; நடந்தது என்ன?; 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை!

T

The Leader Desk

ஜனவரி 17, 2026 • 3:07 AM

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு; நடந்தது என்ன?; 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.
  • இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
  • இந்த துப்பாக்கிச் சூட்டின் போது 4 வயது சிறுவன் ஒருவன் மற்றும் 3 வயது சிறுமி ஒருத்தி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • காயமடைந்த இரண்டு சிறுவர்களினதும் நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.
எழுத்து அளவு:

உலகக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் போது 4 வயது சிறுவன் ஒருவன் மற்றும் 3 வயது சிறுமி ஒருத்தி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த இரண்டு சிறுவர்களினதும் நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

ஜிந்துபிட்டி '125 வத்தை' எனப்படும் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் வந்த குழுவினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...