அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை காரணமாக, வளர்ந்து வரும் நாடான இலங்கைக்கும், உலகின் பல நாடுகளுக்கும் பெரும் பொருளாதார
நெருக்கடிகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என 'நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம்' குறிப்பிடுகிறது.
இன்று (11) வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றிலேயே அந்த இயக்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுனில் ஜயசேகரவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, நமது நாடு தற்போது ஈட்டியுள்ள பொருளாதாரப் பயன்களைப் பயன்படுத்தி, புத்திசாலித்தனமாகவும், நீண்டகாலத் திட்டங்களுடனும், தேசிய ஒருமித்த கருத்துடன் செயற்பட்டால், எதிர்கால சவால்களை எதிர்கொள்ள முடியும் என அவர்கள் நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக ஒரு நாடாக நாம் கவனம் செலுத்த வேண்டிய விடயமாக அரச இயந்திரம் செயல்படுவதில் உள்ள தாமதத்தை அது குறிப்பிடுகிறது.
மேலும், ஜூலை மாத இறுதியில் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் 20% மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும், இந்த வருடத்தில் முடிக்கப்பட வேண்டிய 79 பாரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்களில் 05 மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது எந்த வகையிலும் ஒரு நல்ல நிலைமை அல்ல எனவும், இது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் அந்த இயக்கம் கூறுகிறது.
நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள முழுமையான ஊடக அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.