கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர முகாமைத்துவத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிர்மாணிக்கப்படும்
அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு வருடாந்தம் அபராதம் விதிக்கும் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் இவ்வாறான 2,500 அனுமதியற்ற நிர்மாணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.
"கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில், கடலோரப் பகுதிகளில் அதிகளவில் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிலவற்றை இடித்துத் தள்ளுகிறோம். சிலவற்றுக்கு ஆண்டுதோறும் மிக அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விதிமீறலை முறைப்படுத்தத் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்று, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.