கல்கிஸை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட அங்குலான பகுதியைச் சேர்ந்த இருவர், லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்களில் 28 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று, கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் மேலும் தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கல்கிஸை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.