தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராசா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நேற்று (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் துணைத் தலைவர் சி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்படுவது என்றால் அந்த கூட்டமைப்பின் செயலாளர் தான் முக்கியம். தேர்தல் ஆணையகத்திற்கு கூட்டமைப்பில் இணைந்து கொண்டு கட்சிகளின் பெயர்கள் மற்றது பதவி வகிப்பவர்களின் விபரங்களை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவிக்க வேண்டும் என சட்டம் சொல்லுகின்றது.

நேற்று மூன்று கட்சி தலைவர்களும் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயம் எடுக்கப்பட்டது. அவர்களின் இந்த விடயம் பரிசீலிக்கப்பட்டு முறைப்படியான ஒரு செயலாளரை நியமிக்க வேண்டியது சட்ட தேவையாக இருந்த காரணத்தினால் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உடைய செயலாளர் நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது என இலங்கை தமிழரசு கட்சியின் துணை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

சி.வி.கே. சிவஞானம் அவர்கள் 3 கட்சிகள் கூட்டமைப்பாக இயங்குவதில் இருக்கின்ற சட்ட ரீதியான கருத்தை முன்வைத்தார். தனது இல்லத்தில் இருந்த பிரதியை கொண்டுவந்து கட்டமைப்பாக இருக்காத படியால் தமிழரசு கட்சியின் செயலாளரே தேர்தல் கடமை செய்தாலும் இப்போது தேர்தல் சட்டத்தை பார்த்த பிறகு விதிமுறை பார்த்த பிறகு நாங்கள் 3 கட்சிகளும் உடனடியாகவே என்னுடைய பெயரை கூட்டமைப்பின் 3 தலைவர்கள் இருப்பவர்கள் நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக ஒப்புக்கொண்டபடி என்னுடைய பெயரை செயலாளராக செயற்படுத்த வேண்டும்.

அந்த கடிதத்தை அனுப்பி வையுங்கள் என அந்த கூட்டத்தில் 3 கட்சி தலைவர்களும் கூடி எடுத்த முடிவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக தேர்தல் ஆணையகத்தின் அடிப்படையில் சட்டத்தின் அடிப்படையில் அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக என்னை செயலாளராக செயலாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி